நுகர்பொருள் வாணிபக்கழக பொதுதொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
நுகர்பொருள் வாணிபக்கழக பொதுதொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நிர்வாக சீர்கேட்டை கண்டித்தும், பொதுவினியோகத்தை பாதுகாக்க வலியுறுத்தியும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொதுதொழிலாளர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் அலுவலகம் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மண்டல தலைவர் வேலு தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் புவனேஷ்வரன், மாநில செயலாளர் ராசப்பன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார்கள். இதில் மண்டல துணை செயலாளர் சண்முகவேல், அய்யப்பன், நாகேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். நுகர்பொருள் வாணிப கழகத்தில் மண்டல மேலாளராக கூட்டுறவுத்துறை அதிகாரிகளை நியமனம் செய்வதை வாபஸ் வாங்க வேண்டும். காலி பணியிடங்களை 2015-ம் ஆண்டு வரை பணியில் சேர்ந்த பருவகால பணியாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும். சுமைப்பணி தொழிலாளர்களுக்கு 3 ஆண்டிற்கு ஒருமுறை உயர்த்தி வழங்க வேண்டிய கூலி உயர்வை உடனே அறிவிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.