கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கலெக்டர் அலுவலகம் எதிரே கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கூட்டுறவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கன்னியாகுமரி

நாகா்கோவில்:

குமரி மாவட்டத்தில் உள்ள சில ரேஷன் கடை ஊழியர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தும், ரேஷன் கடை ஊழியர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட கூட்டுறவு ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நேற்று நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பத்மகுமார் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மேரி சுபா, ராஜேஷ், பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட தலைவர் சவுந்தர் கண்டன உரையாற்றினார். இதில் மீன் தொழிலாளர் சங்க மாநில தலைவர் அந்தோணி உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


Next Story