ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் தலைமை தபால் நிலையம் எதிரே இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகியவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய பா.ஜ.க. அரசின் இந்தி திணிப்பை எதிர்த்தும், தமிழ் மொழியை பாதுகாக்க வலியுறுத்தியும் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் பிரகாஷ், மாணவர் சங்க மாவட்ட தலைவர் சஞ்சய்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அறிவழகன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதில் நிர்வாகிகள் தேவநாதன், பார்த்திபன், சதீஷ்குமார், கிருஷ்ணராஜ், தீர்த்தமலை, சுமித்ரா, மதுமிதா, விஜய், ஜெகதீஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story