இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சாணார்பட்டி அருகே, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திண்டுக்கல்
திண்டுக்கல்லில் இருந்து வல்லம்பட்டிக்கு தினமும் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை அருகே உள்ள வலசு கிராமம் வரை நீட்டிக்ககோரி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், நேற்று மாலை செ.குரும்பபட்டி பஸ் நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் சாணார்பட்டி ஒன்றிய குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பாலாஜி கலந்து கொண்டு பேசினார். இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் முகேஷ், கிளை நிர்வாகிகள் விஜய்நாகராஜ் ஆண்டி, சொக்கர் மற்றும் 30-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story