மன்னார்குடியில், தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


மன்னார்குடியில், தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

நெல் கொள்முதல் ஈரப்பதத்தை 22 சதவீதமாக உயர்த்தக்கோரி மன்னார்குடியில், தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்

மன்னார்குடி:

மன்னார்குடியில் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி தே.மு.தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் தலைமை தாங்கினார். மன்னார்குடி ஒன்றிய செயலாளர் தமிழ்ச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் வினோத்குமார், மாவட்ட தொழிற்சங்க துணை தலைவர் ராஜதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்னார்குடி நகர செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.இதில் முன்னாள் மாவட்ட செயலாளர் சண்முகராஜ், மாவட்ட அவை தலைவர் தமிழரசன், மாநிலசெயற்குழு உறுப்பினர் ஜெயபால், மாவட்ட துணை செயலாளர் ஜெயக்குமார், மாவட்ட பொருளாளர் வாசுதேவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 22 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.கடந்த பருவத்தில் விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய பயிர் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.கிராமங்களில் தூர்வாராமல் உள்ள வாய்க்கால்களை தூர்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். முடிவில் நகர பொருளாளர் ஸ்டீபன் ராஜ் நன்றி கூறினார்.பின்னர் மன்னார்குடி உதவி கலெக்டர் கீர்த்தனாமணியிடம் கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story