நாகையில், தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
நாகையில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
நாகையில் இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டம்
நாகை தலைமை தபால் நிலையம் முன்பு இந்தி திணிப்பை கண்டித்து தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை தெற்கு மாவட்ட செயலாளர் கவுதமன் தலைமை தாங்கினார். இளைஞர் அணி அமைப்பாளர் மலரவன், மாணவர் அணி அமைப்பாளர் உதயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அலுவல் மொழியாக இந்தியை அளித்த திட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும். ஒரே மொழி, ஒரே மதம் என்ற சித்தாந்தம் தேவையில்லை. பள்ளி, கல்லூரி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இந்தியை திணிக்க கூடாது.
தேசிய நுழைவு தேர்வு
தேசிய நுழைவு தேர்வு திட்டத்தை கைவிட வேண்டும். இந்திய நாட்டின் இறையான்மையை மத்திய அரசு பறிக்க நினைப்பதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன், நகர தி.மு.க. செயலாளர்கள் மாரிமுத்து, செந்தில்குமார், புகழேந்தி, பொதுக்குழு உறுப்பினர்கள் மேகநாதன், ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேதரத்தினம், காமராஜ், ஒன்றிய செயலாளர்கள் தாமஸ்ஆல்வாஎடிசன், செல்வசெங்குட்டுவன், ஆனந்தன், திட்டச்சேரி பேரூராட்சி செயலாளர் சுல்தான் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் லோகநாதன் நன்றி கூறினார்.