தென்காசியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
மத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தென்காசியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தென்காசி
ெமத்திய அரசின் இந்தி திணிப்பை கண்டித்து தென்காசி மாவட்ட தி.மு.க. இளைஞரணி, மாணவரணி சார்பில் தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தலைமை தாங்கினார். தனுஷ்குமார் எம்.பி., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் செல்லத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் அழகுசுந்தரம், சீனித்துரை, முன்னாள் எம்.எல்.ஏ. முத்துச்செல்வி, தென்காசி மாவட்ட கூட்டுறவு நுகர்வோர் மொத்த விற்பனை சங்க தலைவர் ஷமீம் இப்ராகிம், தென்காசி குற்றாலம் வீட்டு வசதி சங்க தலைவர் சுரேஷ் மற்றும் மாவட்டம் முழுவதும் இருந்து தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story