திராவிட இயக்க தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம்
திராவிட இயக்க தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
தமிழ்நாட்டு அரசின் சட்டமன்ற தீர்மானங்களுக்கும,் மக்கள் உணர்வுகளுக்கும் எதிராக தமிழக கவர்னர் செயல்படுவதாக கூறியும், மத்திய அரசு அவரை உடனடியாக திரும்பபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி நேற்று திருச்சி சிந்தாமணி அண்ணாசிலை அருகே திராவிட இயக்க தமிழர் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணிவண்ணன் வரவேற்று பேசினார். துணை பொதுச்செயலாளர் சேக்தாவூத், அமைப்பு செயலாளர் நாகராசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் மீனாட்சிசுந்தரம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story