மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
வேலூர்
மருந்து விற்பனை பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் வேலூர் மாவட்ட கிளையின் சார்பில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கஜராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அருள், துணை செயலாளர் லட்சுமி நரசிம்மன், பொருளாளர் பிரேம்ஆனந்த், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜனார்த்தனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக மாநில தலைவர் சத்யநாராயணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.26 ஆயிரம் வழங்க வேண்டும். 8 மணி நேர வேலையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்
Related Tags :
Next Story