விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Aug 2023 2:15 AM IST (Updated: 18 Aug 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தேனி

தேசிய விவசாயிகள் விழிப்புணர்வு இயக்கம் சார்பில், தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநில தலைவர் பிரபுராஜா தலைமை தாங்கி பேசினார். இதில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க தலைவர் பொன்காட்சிக்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதால் ரேஷன் கடைகளில் தேங்காய் எண்ணெய், தேங்காய் விற்பனை செய்ய வேண்டும். 100 நாட்கள் வேலை திட்டத்தை விவசாயிகள் பயன்பெறும் வகையில் செயல்படுத்த வேண்டும். சோப்பு தயாரிப்பு நிறுவனங்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வந்த நிலையில் பாமாயிலுக்கு மாறியுள்ளனர். மீண்டும் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி சோப்பு தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட தலைவர் தங்கராஜ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.


Next Story