விழுப்புரத்தில்விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விழுப்புரத்தில்விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 May 2023 12:15 AM IST (Updated: 7 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம்


விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் முருகசாமி மற்றும் 3 சமூக போராளிகள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் திருப்பூர் மாவட்டம் காமன்நாயக்கன்பாளையத்தில் பொய் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் தெற்கு மாவட்ட தலைவர் ரகோத்தமன் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் செஞ்சி சக்திவேல் கண்டன உரையாற்றினார்.

இதில் மாநில துணை செயலாளர் ரமேஷ், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் ஏழுமலை, வடக்கு மாவட்ட செயலாளர் முருகன், மகளிர் அணி மாவட்ட செயலாளர் சுமதி உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story