அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கரூர் மாவட்ட கிளை சார்பில் பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி நெடுஞ்சாலைத்துறை அலுவலக பணியாளர் விடுதி வளாகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட துணைத்தலைவர் குப்புசாமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் கருணாகரன் தொடக்க உரையாற்றினார். மாநில செயலாளர் விஜயகுமார் சிறப்புரையாற்றினார். இதில் தமிழ்நாடு ஊழியர் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். அரசு ஊழியர்களுக்கு 1.7.2022 முதல் வழங்க வேண்டிய 4 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், பொங்கல் போனஸ் ரூ.7 ஆயிரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததாக சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர். இதேபோல் வெண்ணை மலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் பகுதிகளிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story