அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 31 Aug 2023 1:00 AM IST (Updated: 31 Aug 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

தேனி கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தேனி

தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் உடையாளி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சென்னமராஜ் முன்னிலை வகித்தார். கருவூல கணக்குத்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் மீராமைதீன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். தேவையற்ற ஆய்வுக் கூட்டங்களையும், அறிக்கைகளையும் முறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் ஷஜீவனாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.


Next Story