சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

சுகாதார செவிலியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

அனைத்து சுகாதார செவிலியர் சங்க புதுக்கோட்டை கிளையின் சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகில் பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மலர்கொடி தலைமை தாங்கினார். அஞ்சலை முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் யூவின் செயலியை தடை செய்ய வேண்டும். காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ஒரு கம்ப்யூட்டர் ஆபரேட்டரை நியமிக்க வேண்டும். பதவி உயர்வு வழங்க வேண்டும். பிரசவத்திற்கு கர்ப்பிணியை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வருவதை கட்டாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் மாவட்ட தலைவர் அருள்மொழி, துணை தலைவர் சசிபானு, செயலாளர் விஜயலெட்சமி, பொருளாளர் கவிதா பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story