கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்


கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டம்
x

சி.முட்லூர், விருத்தாசலத்தில் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

சிதம்பரம்,

சிதம்பரம் அருகே சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் நேற்று கவுரவ விரிவுரையாளர்கள் கண்களில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பணி நிரந்தரம், சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணி பாதுகாப்பு வழங்கக்கோரி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளர் க.தேவேந்திரன் தலைமை தாங்கினார். கிளை தலைவர் த.ரோஷினி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் கவுரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலை கல்லூரியிலும் கவுரவ விரிவுரையாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


Next Story