'இந்தியா' கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்


இந்தியா கூட்டணியினர் ஆர்ப்பாட்டம்
x

திண்டுக்கல்லில், ‘இந்தியா’ கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்

'இந்தியா' கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகள் சார்பில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே நேற்று மாலையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தி.மு.க. நகர செயலாளரும், மாநகராட்சி துணை மேயருமான ராஜப்பா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், இஸ்ரேல் ராணுவத்தால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன மக்கள் கொல்லப்பட்டதை கண்டித்தும், அமெரிக்கா ஆதரவுடன் இஸ்ரேல் நடத்தும் போரை உடனே கைவிட வேண்டும், பாலஸ்தீனம் மீதான ஆக்கிரமிப்பை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பாலபாரதி, பாண்டி, காங்கிரஸ் மாநகர தலைவர் துரை.மணிகண்டன் உள்பட இந்தியா கூட்டணியில் இடம்பெற்ற அரசியல் கட்சியினர் பலர் பங்கேற்றனர்.


Next Story