காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூர்
திருப்பத்தூரில் காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பத்தூரில் மத்திய அரசை கண்டித்து காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் பி.அருணகிரி தலைமை தாங்கினார். செயலாளர் என். பாஸ்கர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், ''இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, விலைவாசி உயர்வு, இன்சூரன்ஸ் பிரீமியத்துக்கு ஜி.எஸ்.டி. வரி விதிப்பதை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல்-டீசல், கியாஸ்சிலிண்டர் விலை உயர்வு உள்பட பல்வேறு பிரச்சினைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் கோட்டைச் சங்க பொறுப்பாளர் நாராயணன், சி.ஐ.டி.யு.சங்கத்தை சேர்ந்த கேசவன் உள்பட தொழிற்சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள், காப்பீட்டுக் கழக ஊழியர்கள், திருப்பத்தூர் கிளைச் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். பொருளாளர் செல்வம் நன்றி கூறினார்.