இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்


இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறையில், இஸ்லாமியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

மயிலாடுதுறை

இறைதூதர் நபிகள்நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்த பா.ஜனதாவை சேர்ந்த நுபுர் சர்மா, நவின் ஜிண்டால் ஆகியோரை உபா சட்டத்தின் கீழ் கைது செய்யக்கோரி மயிலாடுதுறை பெரிய பள்ளிவாசல் எனப்படும் கூறைநாடு அல்-ஜாமியா ஜூம்மா பள்ளிவாசல் முன்பு ஜமாத் முத்தவல்லி சபிர்தீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்ட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு தலைவர் அப்துல் சாதிக், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக்கழக மாவட்ட செயலாளர் பாசித் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதேபோல குத்தாலம் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் ஜமாத்தார்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் மற்றும் ஜாமியா பள்ளிவாசல் முத்தவல்லிகள் நூர்முகமது, சாகுல்அமீது ஆகியோர் தலைமை தாங்கினர். ஆக்கூரில், பள்ளிவாசல் முன்பு இஸ்லாமிய இயக்கம் மற்றும் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் ஆக்கூர் முஸ்லிம் நிர்வாக சபை தலைவர் முகமது சிகாபுதீன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கொள்ளிடத்திலிருந்து சீர்காழி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தைக்கால் கிராமம் பள்ளிவாசல் எதிரே அனைத்து இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் தைக்கால் ஜமாத் தலைவர் ஹபிபூர்ரஹ்மான் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல, மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.





Next Story