நில அளவையர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூரில் நில அளவையர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் எல்.ரவி தலைமை தாங்கி, தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட துணைத் தலைவர் பூபதி வரவேற்றார். கோட்டக் கிளை தலைவர் வினோத் முன்னிலை வகித்தார். கிளைச் செயலாளர் ஜெயபிரகாஷ் உரையாற்றினார்.
செயலாளர் பனிமலர், சார் ஆய்வாளர்கள் முரளிவாணன், முருகன், மோகன், ஏகாம்பரம் உள்பட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். நில அளவை கள அலுவலர்களின் பல்வேறு பணிச் சுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவர் முதல் உயர்நிலை அலுவலர்கள் வரை உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நிலவரி திட்ட இயக்குனரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். முடிவில் மாவட்ட பொருளாளர் முரளிவாணன் நன்றி கூறினார்.