கள்ளக்குறிச்சியில் கவர்னரை கண்டித்துஅமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கவர்னரை கண்டித்து அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் விவசாயிகள் தொழிலாளர் கட்சி கட்டுமானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு சார்பில் தமிழக கவர்னர் ரவியை கண்டித்து, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு அரசு கட்டுமான வாரிய தலைவர் பொன்குமார் கலந்துகொண்டு கவர்னர் ரவி, சட்டப்பேரவைக்கு எதிராக செயல்படுவதாகவும், தமிழக மக்களுக்கு துரோகம் செய்வதாகவும் கூறி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதில், மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் நிர்வாகிகள் வின்சென்ட், ராசு உள்பட மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story