ஓ.பன்னீர் செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ஓ.பன்னீர் செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
x

ஓ.பன்னீர் செல்வம் அணி-அ.ம.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணையை தீவிரப்படுத்த வேண்டும். உண்மை குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வேண்டும் என தி.மு.க. அரசை வலியுறுத்தி முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி மற்றும் அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம் சார்பில் திருச்சி ஜங்ஷன் காதிகிராப்ட் அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநகர் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வெல்லமண்டி நடராஜன் தலைமை தாங்கினார்.

புறநகர் மாவட்ட செயலாளர் ரத்தினவேல், ராஜ்மோகன், சாமிக்கண்ணு, அ.ம.மு.க. தலைமை நிலைய செயலாளர் ராஜசேகரன், அமைப்பு செயலாளர் சாருபாலா தொண்டைமான், மாவட்ட செயலாளர்கள் செந்தில்நாதன், கலைச்செல்வன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அவைத்தலைவர் ராஜ்குமார், தொழிற்சங்க செயலாளர் நடராஜன், பகுதி செயலாளர்கள் சந்திரன், சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை துரிதப்படுத்தி குற்றவாளிகளை விரைந்து கைது செய்யக்கோரியும், இந்த வழக்கை விரைந்து விசாரிக்காத தி.மு.க. அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நிர்வாகிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story