ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

வந்தவாசியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருவண்ணாமலை

வந்தவாசி

வந்தவாசியில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளரும் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநில பொதுச் செயலாளர் மு.வீரபாண்டியனை கொலை செய்யும் முயற்சி நடந்தது. இதில் சம்பந்தப்பட்டு சமூக விரோதிகளை கைது செய்யக்கோரி வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டச் செயலாளர் ரஹ்மத்துல்லா தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டச் செயலாளர் தங்கராஜ் மாவட்ட நிர்வாக குழு முத்தையன், மாவட்ட செயலாளர் கள்ளக்குறிச்சி வெங்கடேசன், மாவட்ட தலைவர் மோகன்குமார் கண்டன உரையாற்றினார்கள். இதில் வட்டச் செயலாளர் ஆரிப், சுப்ரமணி, ரசூல், ஆயிஷா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் நகரச் செயலாளர் அசோகன் நன்றி கூறினார்.


Next Story