ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கரூர்

கரூர் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைத் தலைவர் துரைக்கண்ணு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மணி வரவேற்புரையாற்றினார். மாவட்ட தலைவர் சுப்பிரமணியன் தொடக்க உரையாற்றினார். இதில் அனைத்து ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்களை எழுப்பினர்.


Next Story