அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்


அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து துறை ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் பெரம்பலூர் வட்டக்கிளை சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் மருதமுத்து தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட துணை தலைவர் கலைச்செல்வி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் ஆளவந்தார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். வட்ட செயலாளர் ராமய்யன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆலத்தூர் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் ஆலத்தூர் வட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் நீலமேகம் சிறப்புரை ஆற்றினார். குன்னம் தாசில்தார் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு குன்னம் வட்ட தலைவர் தேவராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் இளவரசன் சிறப்புரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாட்டில் குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறும் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள், ஊராட்சி எழுத்தர்கள், வருவாய் கிராம ஊழியர்கள், வனத்துறை தொகுப்பு ஊதிய ஊழியர்கள் அனைவருக்கும் ரூ.7,850 என மாத ஓய்வூதியம் வழங்க வேண்டும். 70 வயது நிறைவடைந்த அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் வட்ட நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.


Next Story