ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் ரெயில்வே ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் முன்பு நேற்று தட்சிண ரெயில்வே ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. புதிய ஊதியத்தின் அடிப்படையில் போனஸ் வழங்க வேண்டும். போனஸ் உச்சவரம்பை ரத்து செய்ய வேண்டும். போனஸ் நாட்களை உயர்த்த வேண்டும். ரெயில்வே கேட்டுகளில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியனம் செய்யக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க கிளை துணை தலைவர் முத்துபாண்டியன் தலைமை தாங்கினார். கோட்ட இணைச்செயலாளர் ராஜூ, கிளை செயலாளர் சகாய வில்பிரட், கோட்ட துணை செயலாளர் குமார், நிர்வாகி ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story