வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்சி
தமிழ்நாடு வருவாய்த்துறை பதவி உயர்வு அலுவலர்கள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சந்திரசேகரன் தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கிராம நிர்வாக அலுவலர்களின் பதவி உயர்வு தொடர்பாக வெளியிடப்பட்ட அரசாணை எண் 78/2015-ன் மீது விதித் திருத்தங்கள் மேற்கொண்டு திருத்தப்பட்ட அரசாணை வெளியிட வேண்டும். பதவி உயர்வுபெறும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மட்டும் பாரபட்சமாக முதுநிலை நிர்ணயம் செய்வதை கைவிட்டு விரைவில் நீதி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் ஒருங்கிணைப்பாளர்கள் செல்வம், நாகராஜன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story