சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்பட்டியில் சாலை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி இனாம் மணியாச்சி சந்திப்பில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வெள்ளைச்சாமி தலைமை தாங்கினார்.

சாலை பணியாளர்கள் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். இறந்த சாலை பணியாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்களுக்கு வாரிசு வேலை வழங்க வேண்டும். அனைத்து அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பழைய ஓய்வு ஊதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் சண்முக ராஜா, வட்ட துணை தலைவர் பாலகிருஷ்ணன், வட்டச் செயலாளர் மாரிமுத்து, துணை தலைவர் சவுந்திரராஜன், மாவட்ட தலைவர் பழனிச்சாமி, துணை தலைவர் குமார், மாவட்ட பொருளாளர் அண்ணாத்துரை, தகவல் தொழில்நுட்ப பிரிவு மகேஷ் குமார் ஆகியோர் பேசினார்கள். உட்கோட்ட பொருளாளர் ஆறுமுகம் நன்றி கூறினார்.


Next Story