ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்ட சி.ஐ.டி.யூ. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை தொட்டி ஆபரேட்டர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பிரதமரின் தூய்மை இந்தியா திட்ட தூய்மை காவலர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், தூய்மை பணியாளர்கள் மேல்நிலைத்தொட்டி ஆபரேட்டர்களுக்கு மாதந்தோறும் 5-ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அய்யாத்துரை, சி.ஐ.டி.யூ. மாவட்ட துணை தலைவர் குருவேல், மாவட்ட தலைவர் சந்தானம் ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் கலெக்டரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.


Next Story