ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

தமிழக அரசை கண்டித்து ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஜெயபால் தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சேகர், அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கால அவகாசமின்றியும், விடுமுறை தினங்களிலும் தொடர்ச்சியாக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மீது பணிகளை திணிக்கும் நம்ம ஊரு சூப்பரு பிரசார இயக்கம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ள நிர்பந்திக்கும் தமிழக அரசின் நடவடிக்கைகளை கண்டித்தும், அந்த திட்டத்தை கைவிடக்கோரியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதில் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் சங்கீதா, இணை செயலாளர் சுகதேவ், ஊராட்சி செயலாளர் காமராஜ் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story