சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்


சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம்
x

பணி ஆணை வழங்கக்கோரி சிறப்பு பயிற்றுனர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினா்.

கடலூர்

கடலூர்:

ஒருங்கிணைந்த பள்ளி கல்வியில் கடந்த 22 ஆண்டுகளாக தொடர்ந்து பணியாற்றி வரும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி கற்பிக்கும் சிறப்பு பயிற்றுனர்கள் மற்றும் இயன்முறை டாக்டர்களுக்கு உடனடியாக பணி ஆணையை தமிழக அரசு வழங்க வேண்டும். கடந்த 5 ஆண்டுகளில் எவ்வித ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை. ஊதிய உயர்வையும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுனர்கள் சங்கத்தினர் கடலூர் பழைய கலெக்டர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கதிர்வேல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஆரோக்கியரவி, மாவட்ட பொருளாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக மாநில பொருளாளர் கணபதி கலந்து கொண்டு பேசினார். இதில் சிறப்பு பயிற்றுனர்கள், இயன்முறை டாக்டர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.


Next Story