கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டேசன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி  ஸ்டேசன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டம்
x

கோரிக்கைகளை வலியுறுத்தி ஸ்டேசன் மாஸ்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுரை


அகில இந்திய ஸ்டேசன் மாஸ்டர்கள் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை ரெயில் நிலையத்தின் மேற்கு நுழைவுவாயில் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு கோட்டத்தலைவர் செந்தில் கண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜீவ்காந்தி முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் விஜயராஜன் சிறப்புரையாற்றினார். அப்போது, இரவுப்பணி அலவன்சை உச்சவரம்பு இல்லாமல் வழங்க வேண்டும். பதவி சீரமைப்பை புதிய பதவியின் பெயரை கொண்டு மாற்றியமைக்க வேண்டும். அனைத்து ரெயில் நிலையங்களிலும் நிலைய அதிகாரிகளுக்கு ஓய்வறை அமைத்து கொடுக்க வேண்டும். ரெயில்வே பயணிகளின் பாதுகாப்பான பயணத்திற்கு ஸ்டேசன் மாஸ்டர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்க வேண்டும். ரெயில்வே வாரிய உத்தரவுப்படி கூடுதல் ஸ்டேசன் மாஸ்டர்களை நியமிக்க வேண்டும். பாதுகாப்பு மற்றும் பணிச்சுமை அழுத்த அலவன்ஸ் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில் டி.ஆர்.இ.யூ. கோட்ட நிர்வாகி ஜெகதீசன் மற்றும் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட ரெயில் நிலையங்களில் பணியாற்றும் ஸ்டேசன் மாஸ்டர்கள் கலந்து கொண்டனர்.


Next Story