விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
ஒரத்தநாடு
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நூறு நாள் வேலை செய்து கொண்டிருந்த இடத்தில், பட்டியல் இனத்தை சேர்ந்த தந்தை, மகன் இருவரையும் சுட்டுக்கொன்ற சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரியும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திருவோணம் ஒன்றியம் ஊரணிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ராமசாமி தலைமை வகித்தார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் வாசு, விவசாயிகள் சங்கம் ஒன்றியச்செயலாளர் கோவிந்தராஜ், விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றிய தலைவர் சின்னப்பா, விவசாய தொழிலாளர் சங்கம் ஒன்றியக்குழு உறுப்பினர் பாஸ்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் மேரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story