விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

தாந்தோணிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நேற்று தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்டச்செயலாளர் தங்கவேல் தலைமை தாங்கினார். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்பு திட்டத்தில் குடும்பத்திற்கு 100 நாள் வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும், வீடு இல்லாத அனைவருக்கும் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும், பழுதடைந்த தொகுப்பு வீடுகளை மராமத்து செய்து கொள்ள போதுமான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும், மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இ்ந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் சங்க நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story