விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விருத்தாசலத்தில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விருத்தாசலம்,
புவனகிரி, பின்னலூர், சித்தேரியில் 32 விவசாய கூலி தொழிலாளர்கள் குடிசை வீடுகளில் வசித்து வருகின்றனர். இவர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி உடனே குடிசை வீடுகளை காலி செய்யும்படி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 32 விவசாய தொழிலாளர் குடும்பத்தினருக்கும் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். இந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும். மேலும் விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பொதுப்பணித்துறை அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் அசோகன், மாவட்ட குழு உறுப்பினர் கலைச்செல்வன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட துணை செயலாளர் மணி, துணைத்தலைவர் வெற்றி வீரன், மாற்றுத்திறனாளி சங்க மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன், தமிழ் மணி, ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய செயலாளர் பரமசிவம் மற்றும் பின்னலூர் கிராம மக்கள் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள் உதவி செயற்பொறியாளர் உமாவை சந்தித்து கோரிக்கை மனுவை கொடுத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.