விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 April 2023 12:30 AM IST (Updated: 18 April 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஜகன் தலைமை தாங்கினார். துணை தலைவர் சுப்பையா, செயலாளர் அல்லிமுத்து, பொருளாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேசியக்குழு உறுப்பினர் கணேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாய தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 200 நாட்கள் வேலை வழங்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்.

தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.600 சம்பளமாக நிர்ணயித்து வழங்க வேண்டும். ஆன்லைன் வருகை பதிவேடு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


Related Tags :
Next Story