ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்

ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் மேற்கொள்ளும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட ஒட்டுமொத்த உயர் அலுவலர்களின் மெத்தனப்போக்கினை கண்டித்தும், வளர்ச்சித் துறை ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும் நேற்று கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கருப்பு பட்டை அணிந்து கரூர் மாவட்ட தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story