மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்


மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டம்
x

நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பா.ஜனதாவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி பா.ஜனதாவின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

பா.ஜனதாவின் ஆர்ப்பாட்டம்

சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தியும், மத மோதல்களை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடும் அரசியல் வாதிகளுக்கு மாவட்ட நிர்வாகம் துணை போக கூடாது என்பதை வலியுறுத்தியும் பா.ஜனதா கட்சி சார்பில் நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். மண்டல தலைவர்கள் வேணுகிருஷ்ணன், சிவசீலன், ராஜன், முரளி மனோகர், மண்டல பார்வையாளர்கள் அஜித் குமார், நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ., அய்யப்ப சேவா சமாஜம் மாவட்ட தலைவர் நாஞ்சில் ராஜா, மாவட்ட துணை தலைவர் தேவ், கவுன்சிலர்கள் ரோசிட்டா, சுனில்அரசு, அய்யப்பன், வீரசூரபெருமாள், ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கன்னியாகுமரி

கொட்டாரம் சந்திப்பில் நடந்த ஆர்பாட்டத்துக்கு அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பார்வையாளர் சுபாஷ் தலைமை தாக்கினார். ஒன்றிய தலைவர்கள் சுயம்பு, சுயம்புலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இந்து முன்னணி பேச்சாளர் எஸ்.பி.அசோகன், மாவட்ட விஷ்வ இந்து பரிஷத் செயலாளர் ஜெகன், மாவட்ட பா.ஜனதா பிரசார அணி செயலாளர் தாமரை துரையரசன், அன்பாலயா நிறுவனர் சிவச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ராஜாக்கமங்கலம்

ராஜாக்கமங்கலம் சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ராஜாக்கமங்கலம் ஒன்றிய தலைவர் பொன் சுரேஷ் தலைமை தாங்கினார். இதில் செயலாளர் செந்தில் அதிபன், மேலசங்கரன்குழி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசரவணன், துணைத்தலைவர் காரவிளை ரமேஷ், ராஜாக்கமங்கலம் ஊராட்சி மன்ற தலைவி ஜெகதீஸ்வரி சுகுமார், துணை தலைவர் செல்லதுரை, கணபதிபுரம் ஊராட்சி மன்ற தலைவி ஸ்ரீவித்யா, கவுன்சிலர் ஜெயா, ஹேமா, முன்னாள் கவுன்சிலர் சுகுமார், ஹெலன் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

ஆரல்வாய்மொழி

தோவாளை ஒன்றிய பா.ஜனதா சார்பில் ஆரல்வாய்மொழி சந்திப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தோவாளை ஒன்றிய பார்வையாளர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். தோவாளை கிழக்கு ஒன்றிய தலைவர் கிருஷ்ணன், மேற்கு ஒன்றிய செயலாளர் மகாதேவன்பிள்ளை, ஒன்றிய பொதுச்செயலாளர் மகாதேவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் மீனாதேவ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில இணை செயலாளர் காளியப்பன், ஆரல்வாய்மொழி பா.ஜனதா தலைவர் நரேந்திரகுமார், ஒன்றிய இளைஞரணி தலைவர் சந்திரகுமார், ஆரல்வாய்மொழி கவுன்சிலர் மாதேவன்பிள்ளை, மாநில செயற்குழு உறுப்பினர் ஜெயராம், தாழக்குடி பார்வையாளர் விஜயகுமார் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின்போது கோஷங்கள் எழுப்பப்ட்டது.


Next Story