ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
வங்கி எழுத்து தேர்வு தேதியை மாற்றக்கோரி ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் நடந்தது.
திருவாரூர்
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள வங்கி எழுத்தர் தேர்வு தேதியை மாற்றக்கோரி திருவாரூர் ரெயில் நிலையம் முன்பு ஜனநாயக இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது, ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் சங்கத்தின் செயலாளர் ஆரூர அறிவு தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் முன்னிலை வகித்தார். இதில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி செய்தி தொடர்பாளர் தமிழ்செல்வன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் சீனி செல்வம், காங்கிரஸ் பொதுச்செயலராளர் வீரமணி, நகரமன்ற உறுப்பினர் வரதராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story