பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

தூத்துக்குடியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்ட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் தூத்துக்குடி சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தமிழர் விடியல் கட்சி மாவட்ட பொறுப்பாளர் சேமா.சந்தணராஜ் தலைமை தாங்கினார். திராவிடர் விடுதலை கழக மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன், விடுதலைசிறுத்தைகள் கட்சி மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால், தமிழக வாழ்வுரிமை கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

ஆர்ப்பாட்டத்தில் 2002-ம் ஆண்டு நடந்த குஜராத் இனக்கலவரத்தின் போது கர்ப்பினி பெண்ணை கற்பழித்த குற்றவாளிகள் 11 பேரும் ஜெயிலில் இருந்து நன்னடத்தை அடிப்படையில் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இது பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு செய்யப்பட்ட அநீதி ஆகும். ஆகையால் அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்க 11 குற்றவாளிகளையும், அவர்களின் விடுதலையை ரத்து செய்து மீண்டும் ஜெயிலில் அடைக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பெரியாரிய உணர்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்ப்புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் செ.தாஸ் நன்றி கூறினார்.


Next Story