உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
உழைக்கும் மக்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கரூர் மாவட்ட தலித் மக்கள் முன்னேற்ற சங்கம் மற்றும் உழைக்கும் மக்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட தலித் மக்கள் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் கரிகாலன் தலைமை தாங்கினார். இதில் தலைவர் மாணிக்கம், பொருளாளர் அந்தோணிசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். கரூர் மாநகரில் அம்பேத்கர் உருவச்சிலை நிறுவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். உள்ளாட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.20 ஆயிரம் வழங்கிட வேண்டும். தூய்மை பணியாளர் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு, தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.