சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்
கரூர் மாவட்ட தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் மரகதம் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சாந்தி உள்பட சுகாதார செவிலியர்கள் சங்கத்தை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். விஎச்என் மற்றும் ஏஎன்எம்-களுக்கான இடமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு தான் விரும்பிய இடங்களை தேர்வு செய்தவர்களுக்கு உடன் மாறுதல் உத்தரவுகளை காலம் தாழ்த்தாமல் அனுப்ப வேண்டும். 42 சுகாதார மாவட்டங்களுக்கு 42 சிஎச்என்-களை ஏற்படுத்த இயக்குனரால் அரசுக்கு பரிந்துரைத்து 42 சிஎச்என் பதவிகளை ஏற்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர்.
Related Tags :
Next Story