மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
திண்டுக்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் திண்டுக்கல் பேகம்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட செயலாளர் சச்சிதானந்தம் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், வழிபாட்டு தலங்கள், வீடுகளை இடிக்கும் புல்டோசர் கலாசாரத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும். சிறுபான்மையினர் மீதான தொடர் தாக்குதலை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் நகர செயலாளர் அரபு முகமது உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story