நரிக்குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோவில்பட்டியில் நரிக்குறவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவில்பட்டி:
கோவில்பட்டி தாலுகா அலுவலகம் முன்பு மந்தித்தோப்பு நரிக்குறவர் காலனியை சேர்ந்த நரிக்குறவர் சமூக மக்கள் சங்கத் தலைவர் பி. கலியமூர்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் திருமுருகன், மாவீரன், தேவயானி, நயன்தாரா மற்றும் ஏராளமான நரிக்குறவர் மக்கள் கலந்து கொண்டனர்.
மந்தித்தோப்பு மலை அடிவாரத்தில் எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குடிசைகள் போட்டு குடியிருந்து வருகிறோம். இந்த இடத்தை சிலர் ஆக்கிரமிப்பு செய்து சர்வே கற்களை அகற்றி பிரச்சினை செய்து வருகின்றனர். இது தொடர்பாக 2014- ம் ஆண்டு பிரச்சினை ஏற்பட்டதால், இது பற்றி நாங்கள் கொடுத்த புகாரின் பேரில் கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது. இந்த நிலையில் பிரச்சினைக்குரிய நபர்கள் எங்களிடம் சமாதானமாக பேசி, உங்கள் இடத்திற்கு வந்து எந்த பிரச்சினையும் செய்ய மாட்டோம் என்று பத்திரத்தில் எழுதிக் கொடுத்துவிட்டு ெசன்றனர். இப்போது மீண்டும் வந்து பிரச்சினை செய்கிறார்கள். எனவே, தாசில்தார், எங்களுக்கு ஒதுக்கியுள்ள இடத்தை அளந்து கொடுத்து, எங்கள் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் லெனினிடம் கோரிக்கை மனுவை கொடுத்து விட்டு அவர்கள் கலைந்து சென்றனர்.