புரட்சிகர சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


புரட்சிகர சோசலிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மயிலாடுதுறை
மயிலாடுதுறை கிட்டப்பா அங்காடி முன், புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் நிாவாகி ராமதாஸ் தலைமை தாங்கினார். கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு எதிராக அறவழியில் போராடிய புரட்சிகர சோசலிஸ்டு கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினரும், கொல்லம் தொகுதி எம்.பி.யுமான பிரேமச்சந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ. அஜிஸ் மற்றும் தொண்டர்கள் மீது காவல் துறையை ஏவி தாக்குதல் நடத்திய கேரள அரசை கண்டித்தும், இடதுசாரி கட்சிகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.








Next Story