தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

தமிழ்தேசிய பேரியக்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருச்சி

திருப்பூர் மற்றும் ஒசூரில் தமிழர் மீது தாக்குதல் நடத்திய வடமாநிலத்தவர்களை கண்டித்தும், வடமாநிலத்தவர் வருகைகயை கட்டுப்படுத்த உள்நுழைவு அனுமதி முறையை அமல்படுத்த கோரியும், தமிழ்தேசிய பேரியக்கத்தினர் திருச்சியில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் கவித்துவன் தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ராசாரகுநாதன், தமிழக விவசாயிகள் சங்க தலைவர் சின்னத்துரை ஆகியோர் சிறப்புரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story