கோவில்மனை குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


கோவில்மனை குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x

கோவில்மனை குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர்

கும்பகோணம் தலைமை தபால் நிலையம் அருகே தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்கம், தமிழ்நாடு கோவில் கடைவாடகைதாரர் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு கோவில்மனை குடியிருப்போர் சங்க தலைவர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் சொக்கலிங்கம், பொருளாளர் ராமமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கோவில் இடங்களுக்கு வாடகை முறையை ரத்து செய்து, குத்தகை முறையை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் கோவில் செயல் அலுவலர் கணேஷ்குமாரை நேரில் சந்தித்து தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். இதேபோல் மதுக்கூரில் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒன்றிய செயலாளர் பாரதி மோகன், தலைவர் தங்கராசு, பொருளாளர் செல்வம் மற்றும் உறுப்பினர்கள், நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

பேராவூரணி பெரியார் சிலை அருகே தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் மாவட்ட துணைச்செயலாளர் ராஜமாணிக்கம் தலைமை தாங்கினார். விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ரவி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் பன்னீர்செல்வம் தொடங்கி வைத்து பேசினார்.


Next Story