தஞ்சையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் த.மா.கா.வினர் ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் த.மா.கா.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தலைவர் சாதிக்அலி தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட செயலாளர் ராம்மோகன், இளைஞரணி தலைவர் திருச்செந்தில், வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் பஸ் நிலையத்தில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கமும் நடத்தினர். இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகர தலைவர் சங்கர், தெற்கு மாவட்ட பொருளாளர் தர்மலிங்கம், பொதுச்செயலாளர் கொண்டல் சிவ.முரளிதரன், வட்டார தலைவர்கள் அன்பழகன், அய்யாறு மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கும்பகோணம் மாநகர இளைஞரணி தலைவர் சந்தோஷ்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story