ேத.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
ேத.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
திருவாரூர்
தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடக அரசு உடனே திறந்திட வேண்டும். மகளிர் உரிமைத்தொகை ரூ.1000 அனைத்து மகளிர்களுக்கும் வழங்க வேண்டும், விவசாயிகளின் நிலத்தை என்.எல்.சியிடம் இருந்து மீட்க வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முழுவதும் தே.மு.தி.க. சார்பில் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் புதிய ரெயில் நிலையம் முன்பு தே.மு.தி.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் விவசாய அணி செயலாளர் பாலகிருஷ்ணன், நகர செயலாளர் சதீஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story