பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பஸ் நிறுத்தத்தில் தமிழரசு கட்சி, தமிழர் நீதிக்கட்சி, தாயக மக்கள் கட்சி ஆகிய கட்சிகளின் சார்பில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழரசு கட்சியின் துணை பொதுச் செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் தாயக மக்கள் கட்சி தலைவர் தமிழ்ச்செல்வன், தமிழர் நீதிக்கட்சி நிறுவன தலைவர் சுபா.இளவரசன் ஆகியோர் நீண்ட நாட்களாக முகாமில் இருக்கும் ஈழத்தமிழர்களை விடுதலை செய்யவேண்டும். பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தக்கூடாது. விளைநிலங்களை பறிக்கும் என்.எல்.சி. நிர்வாகத்தை கண்டிப்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் தமிழரசு கட்சியின் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வல்லரசு நன்றி கூறினார்.


Next Story