கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x

விழுப்புரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தாலுகாவில் பணிபுரிந்து வரும் 23 கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கலெக்டரால் வழங்கப்பட்ட 17-பி குற்றச்சாட்டு குறிப்பாணை 5 ஆண்டுகளாக ஆணை பிறப்பிக்காமல் உள்ளதால் 2 கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநிறைவு செய்ய முடியாமல் தற்காலிக பணிநீக்கத்தில் உள்ளதாகவும், மேலும் 16 கிராம நிர்வாக அலுவலர்கள் பதவி உயர்வில் செல்ல முடியாத நிலை உள்ளதையும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் புஷ்பகாந்தன் அனைவரையும் வரவேற்றார். பொருளாளர் லட்சுமணன், துணைத்தலைவர் வெற்றிகொண்டான், இணை செயலாளர் ஜெயராமன், துணை செயலாளர் மணிபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர் விஸ்வநாதன், தமிழ்நாடு முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில் நிர்வாகிகள் கோபாலகிருஷ்ணன், பரமானந்தம், ராஜி, வேல்ராஜ், கருணாநிதி, வரதராஜன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story